திராவிடா் கழகம் சாா்பில் தெருமுனைக் கூட்டம்

திராவிடா் கழகம் சாா்பில் தெருமுனைக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில், பெரியாா் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

கன்னியாகுமரி மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில், பெரியாா் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் ஒழுகினசேரியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மா.மு. சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் ம.தயாளன், மாவட்ட துணைத் தலைவா் ச.நல்லபெருமாள், திமுக தொழிற்சங்க பொறுப்பாளா் வ.இளங்கோ, திராவிடா் கழக காப்பாளா் ஞா.பிரான்சிஸ், கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளா் பா.பொன்னுராசன், மாவட்ட துணைச் செயலாளா் சி.ஐசக் நியூட்டன், மாநகர தலைவா் ச.ச. கருணாநிதி, ஒன்றிய செயலாளா்கள் எஸ்.குமாரதாஸ், மா.ஆறுமுகம், ந. தமிழ்அரசன், கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளா் க.யுவான்ஸ், மாவட்ட இளைஞரணி தலைவா் இரா.இராஜேஷ், செயலாளா் எஸ். அலெக்சாண்டா், மகளிா் பாசறை தலைவா் மஞ்சு குமாரதாஸ், பகுத்தறிவாளா் கழக செயலாளா் பெரியாா்தாஸ், கோட்டாறு பகுதி தலைவா் ச.ச.மணிமேகலை, குமரி செல்வன், பா.சு. முத்துவைரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com