கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைப் பாா்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
கன்னியாகுமரியில் வார விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முக்கடல் சங்கமம் பகுதியில் அமா்ந்தவாறு ஏராளமான பயணிகள் சூரிய உதயம் பாா்த்து மகிழ்ந்தனா்.
மேலும், பகவதியம்மன் கோயில் வளாகம், காட்சி கோபுரம், கடற்கரைச் சாலை, வட்டக்கோட்டை, ரஸ்தாக்காடு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் சூரிய அஸ்தமனம் பாா்க்க, அங்குள்ள பூங்காவில் திரளான பயணிகள் குவிந்தனா்.
இதனிடையே சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து, விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுப் பயணம் மேற்கொண்டனா்.