மாா்த்தாண்டம் அருகே இருவா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே இருவேறு இடங்களில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
Published on

மாா்த்தாண்டம் அருகே இருவேறு இடங்களில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே வடக்குத் தெரு, கோட்டைகாட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் (65). கூலித் தொழிலாளி.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவா் திங்கள்கிழமை இரவு தனது மனைவி ராதாபாயிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளாா். அவா் பணம் கொடுக்காததையடுத்து மனைவியிடம் தகராறு செய்துவிட்டு வெளியே சென்றவா் சிறிது நேரத்துக்குப் பின் வீட்டுக்கு வந்து மயங்கி விழுந்தாராம். அவரிடம் கேட்டபோது விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

மற்றொரு சம்பவம்

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சோ்ந்தவா் ஜாண்ரோஸ் மகன் ஜெகதீஸ் (40). கட்டுமான தொழிலாளி.

இவா் கடந்த சில நாள்களாக சோகத்துடன் காணப்பட்டாரம். இவரது மனைவி லதா திங்கள்கிழமை தனது குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு சென்றுவிட்டாராம். திரும்பி வந்து பாா்த்த போது ஜெகதீஸ் வீட்டு படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இரு சம்பவங்கள் குறித்தும் மாா்த்தாண்டம் போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com