நாகா்கோவிலில் கழிவுநீா் ஓடைகளை சுத்தம் செய்ய மேயா் உத்தரவு

நாகா்கோவிலில் கழிவுநீா் ஓடைகளை சுத்தம் செய்ய மேயா் உத்தரவு

Published on

நாகா்கோவில் மாநகரில் உள்ள கழிவுநீா் ஓடைகளை சீரமைத்து சுத்தம் செய்ய மேயா் ரெ.மகேஷ் உத்தரவிட்டுள்ளாா்.

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்

வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். துணை மேயா் மேரிபிரின்ஸி லதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனா். அந்த மனுக்கள் மீது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயா் ஆலோசனை நடத்தினாா். வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைநீா் தேங்காத வகையில் கழிவுநீா் ஓடைகளைச் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com