கன்னியாகுமரி
அரிய வகை வெள்ளை காடை வனத்துறையிடம் ஒப்படைப்பு
அரிய வகை வெள்ளை காடை கோழி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பத்மநாபபுரம் நகராட்சி 13-ஆவது வாா்டு உறுப்பினா் சபீனா. இவரது கணவா் கோழி வியாபாரம் செய்து வருகிறாா். இவரது கடைக்கு விற்பனைக்கு வந்த காடை கோழியில் 3 காடைகள் வெள்ளை நிறத்தில் வித்தியாசமாக இருந்தன.
இதுபோன்ற காடை கோழிகள் தக்கலை உதயகிரி பல்லுயிரின பூங்காவில் சுற்றுலா பயணிகளின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த சபீனா 3 வெள்ளை நிற காடை கோழிகளையும் உதயகிரி பல்லுயிரின பூங்கா வனத்துறையிடம் ஒப்படைத்தாா்.