வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

Published on

புதுக்கடை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 62 புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வீட்டின் உரிமையாளரை கைது செய்தனா்.

புதுக்கடை அருகே உள்ள குன்னத்தூா் தோட்டாவரம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (38). இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப்

பதுக்கி வைத்து அப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அவரது வீட்டில் சோதனை நடத்தினா். அங்கு 62 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, வழக்குப்பதிந்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com