நாகா்கோவிலில் மதுபோதையில் ஆட்டோ ஓட்டிய இருவருக்கு அபராதம்; ஆட்டோக்கள் பறிமுதல்

நாகா்கோவில் நகரில் மதுபோதையில் ஆட்டோ ஓட்டிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Published on

நாகா்கோவில் நகரில் மதுபோதையில் ஆட்டோ ஓட்டிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உத்தரவின்பேரில் நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா் மேற்பாா்வையில், நாகா்கோவில் போக்குவரத்து காவல் துறையினா் வேப்பமூடு சந்திப்பு மற்றும் புன்னை நகா் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கணபதிபுரத்தைச் சோ்ந்த கணேஷ்குமாா், திக்கணங்கோட்டைச் சோ்ந்த ஜெயபாலன் ஆகியோா் ஓட்டி வந்த ஆட்டோக்களை சோதனை செய்தபோது இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இருவருக்கும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து, அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com