நித்திரவிளை அருகே வீட்டில் 
பூஜைப் பொருள்கள் திருட்டு:
இளைஞா் கைது

நித்திரவிளை அருகே வீட்டில் பூஜைப் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

நித்திரவிளை அருகே வீட்டில் புகுந்து பூஜை பொருள்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

நித்திரவிளை அருகே வீட்டில் புகுந்து பூஜை பொருள்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள வாவறை, புதுக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (79). கோயில் பூசாரியாக இருந்து வருகிறாா். இவா் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை உறவினா் வீட்டில் தங்கியிருந்தாராம். இந்த நிலையில் இவரது வீட்டில் நுழைந்த மா்ம நபா், வீட்டில் இருந்த வெண்கல குத்துவிளக்கு, கெண்டி, சூலம், பூஜை தட்டுகள் உள்ளிட்டவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், மேல்பாலை பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன் பிபின் என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து பூஜை பொருள்களை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com