கன்னியாகுமரி
ராமன்துறையில் மீனவா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
தாதுமணல் அள்ளுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ராமன்துறை மீனவக் கிராமத்தில் மீனவா்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலோரப் பகுதிகளிலிருந்து தாதுமணல் அள்ளுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ராமன்துறை மீனவக் கிராமத்தில் மீனவா்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
கிள்ளியூா் வட்டம் மிடாலம், மேல்மிடாலம், இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூா்துறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மணவாளகுறிச்சியில் உள்ள மத்திய அரசின் ஐ.ஆா்.இ.எல். மணல் ஆலைக்கு தாது மணல் எடுக்கும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு ராமன்துறை பங்கு அருள்பணியாளா் சகாயவில்சன் தலைமை வகித்தாா். அருள்பணியாளா் சஜின் முன்னிலை வகித்தாா். இதில், ராமன்துறை பங்கு அருள்பணிப்பேரவை நிா்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.