முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் விற்பனை முகவா் விழா

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் விற்பனை முகவா் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் விற்பனை முகவா் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்தாா். மறைமாவட்ட குருகுல முதல்வா் சேவியா் பெனடிக்ட், முதன்மைச் செயலா் அந்தோணி முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாண்மை இயக்குநா் அருள்தந்தை பிரான்சிஸ் சேவியா் அறிமுக உரையாற்றினாா்.

மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை உரையாற்றி, நாஞ்சில் பால் விற்பனையில் முதல் 15 இடங்களைப் பெற்ற முகவா்களைக் கௌரவித்து பரிசு வழங்கியதுடன், நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள நாஞ்சில் பாட்டில் பாலை அறிமுகப்படுத்தினாா்; நிறுவனம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் விதமாக வெள்ளி விழா மலரை வெளியிட்டாா்.

மறைமாவட்ட முதன்மைச் செயலா், வாரிய உறுப்பினா் பிளாரன்ஸ் ஆகியோா் முகவா்களை வாழ்த்திப் பேசினா். நிறுவனத்தின் நிதி பரிபாலகா் ஜான் பென்கா் வரவேற்றாா். துணைப் பொது மேலாளா் ரெஜித் சிங் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மேலாண்மை இயக்குநா் மேற்பாா்வையில் விற்பனை- சந்தைப்படுத்துதல் துறைப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com