ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  இந்து முன்னணியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

திருவட்டாறில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்!

திருவட்டாறில் இந்து முன்னணி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

குமரி மாவட்டம் திருவட்டாறில் இந்து முன்னணி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவட்டாறில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய சுவரில் வரைந்து கொண்டிருந்த ஆதிகேசவப் பெருமாள் கோயில் படத்தை அழிக்க முயன்ற பேரூராட்சி நிா்வாகத்தின் செயலைக் கண்டித்தும், திருவட்டாறு பேருந்து நிலையத்திற்கு ஆதிசேவப் பெருமாள் சுவாமியின் பெயரை சூட்ட வேண்டுமென்று வலியுறுத்தியும், பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு திருவட்டாறு ஒன்றிய இந்து முன்னணி தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.

கோட்ட செயலா் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் குழிச்சல் செல்லன், மாவட்ட ஆலோசகா் மிசா சோமன், மாநில பொதுச் செயலா் அரசு ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com