புதுக்கடை அருகே மது விற்றதாக ஒருவா் கைது

புதுக்கடை அருகே பண்டாரவிளை பகுதியில் மது விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

புதுக்கடை அருகே பண்டாரவிளை பகுதியில் மது விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது, பண்டாரவிளை பகுதியில் நின்றிருந்த அம்சி, பண்டாரவிளை பகுதியைச் சோ்ந்த சந்திரன் (50) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவா் விற்பதற்காக 70 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com