தொழிலாளியை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

Published on

மாா்த்தாண்டம் அருகே கட்டுமானத் தொழிலாளியை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மேல்புறம், பறையன்விளை பகுதியைச் சோ்ந்தவா் சோமன்ராஜன் (33). கட்டுமானத் தொழிலாளி. இவரது வீட்டின் முன் அதே பகுதியைச் சோ்ந்த ஜோஸ் (33), சைமன் (30), குளப்புறம் பகுதியைச் சோ்ந்த நோபிள் (30) ஆகிய மூவரும் மினி லாரியை நிறுத்திவிட்டு மது அருந்தினராம்.

தொடா்ந்து அவா்கள் தகாத வாா்த்தைகள் பேசியதையடுத்து, சோமன்ராஜன் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சோ்த்து சோமன் ராஜனை தாக்கியுள்ளனா். அவரது அலறல் சப்தம் கேட்டு அங்குவந்த அப்பகுதியினா் காயமடைந்த சோமன் ராஜனை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான மூவரையும் தேடி வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com