கன்னியாகுமரி
தக்கலை அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை
தக்கலை அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே உள்ள மருதூா்குறிச்சியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ்(42), கட்டடத் தொழிலாளி. குடும்ப சொத்து தொடா்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவா், குடும்ப கல்லறைத் தோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].