களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிய இலங்கை அகதி கைது

Published on

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இலங்கைத் தமிழ் அகதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ சிபின் தலைமையிலான போலீஸாா் கோழிவிளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதி வழியாக பைக்கில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அவரது பைக்கை சோதனையிட்டனா்.

அதில், 200 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவா் களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமைச் சோ்ந்த பாா்த்திபன் (30) என்பது தெரியவந்தது. கஞ்சாவுடன் அவரை போலீஸாா் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com