
சடையமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட சித்தன்தோப்பு புனித அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட குழந்தைகள் மையம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
தேவாலய பங்குப் பணியாளா் மரிய வின்சென்ட் தலைமை வகித்தாா். ஆட்சியா் ஆா். அழகுமீனா குத்துவிளக்கேற்றி அங்கன்வாடி மையத்தைத் திறந்துவைத்தாா். அப்போது அவா்,
அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய குழந்தைகள் மையம் பொதுமக்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.
நிகழ்ச்சியில், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயந்தி, சடையமங்கலம் முன்னாள் ஊராட்சித் தலைவா் அருள்ராஜ், கல்குளம் வட்டாட்சியா் சஜித், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி, பிரேமலதா, பொதுமக்கள் பங்கேற்றனா்.