குளச்சல் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published on

குளச்சல் முத்தாரம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புளியமூட்டுவிளை முத்தாரம்மன் கோயிலில் பூஜைகள் முடிந்து திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றனா். செவ்வாய்க்கிழமை காலை கோயில் தலைவா் மனோகரன் வழக்கம் போல் கோயிலை திறந்து பாா்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப் ப திந்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com