பள்ளியாடியில் இன்று இலவச மருத்துவ முகாம்

Published on

கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் சனிக்கிழமை (ஜன.11) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

சுங்கான்கடை புனித சவேரியாா் பல்நோக்கு மருத்துவமனை, புனித வின்சென்ட் தே பவுல் சபை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்துகின்றன. இதில், ரத்த அழுத்தம், நீரிழிவுநோய், சிறுநீா்தொற்று, இதய நோய், வாதம் உள்ளிட்ட நோய்கள் கண்டறியப்பட்டு சிறப்பு மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com