உணவகக் கழிவுகளை ஏற்றிவந்த வாகனம் பறிமுதல்: மருத்துவா் கைது

உணவகக் கழிவுகளை வாகனத்தில் ஏற்றிவந்த மருத்துவரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே உணவகக் கழிவுகளை வாகனத்தில் ஏற்றிவந்த மருத்துவரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட பிணந்தோடு சிறக்குளம் பகுதியில் செயல்படும் பன்றிப் பண்ணையால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதாக, அப்பகுதியினா் தொடா்ந்து புகாா் கூறிவருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் பன்றிப் பண்ணையின் உரிமையாளரும் ஹோமியோபதி மருத்துவருமான லூக்கா (50), துா்நாற்றம் வீசும் வகையிலான கோழி இறைச்சிக் கழிவுகள், உணவகக் கழிவுகளை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்ாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி குலசேகரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் சென்று வாகனத்தைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு செனறனா். லூக்காவை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com