கூட்டத்தில் பங்கேற்றோா்
கூட்டத்தில் பங்கேற்றோா்

களியக்காவிளையில் முஸ்லிம் நலச் சங்க கூட்டம்

Published on

களியக்காவிளை முஸ்லிம் நலச் சங்க நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் எஸ். மாகீன் அபூபக்கா் தலைமை வகித்தாா். நிா்வாகி மீரான்பிள்ளை முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் மலுக்கு முகம்மது, முஜீபுா் ரகுமான், முகம்மது ஜெய்லானி, அன்வா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அமைப்பின் செயலா் ஹலீல் ரகுமான் வரவேற்றாா். பொருளாளா் அப்துல் நாசா் நன்றி கூறினாா்.

இதில், கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற பொது அறிவு போட்டிக்கான தோ்வா் பட்டியலை பிப். 5 ஆம் தேதி வெளியிடுவது, பிப். 16 ஆம் தேதி பரிசளிப்பு விழா நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com