மாா்த்தாண்டத்தில் 4.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Published on

மாா்த்தாண்டத்தில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட 4.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் சந்தை பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் ஜெகதீசன் (40) என்பவரின் கடையில் பதுக்கி வைத்திருந்த 4.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஜெகதீசனை கைது செய்தனா்.

பளுகல் அருகே...

இதே போன்று பளுகல் அருகே இடைக்கோடு, மலையாற்றின் பழஞ்சி பகுதியில் உதவி ஆய்வாளா் கதிரேசன் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் உள்ள செல்வராஜ் (60) என்பவரின் கடையில் மேற்கொண்ட சோதனையில் அங்கு பதுக்கி வைத்திருந்த 15 பாக்கெட் புகையிலை பொருள்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். மேலும் செல்வராஜை கைது செய்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம், பளுகல் போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com