
கன்னியாகுமரி பேரூராட்சி 10ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு 10ஆவது வாா்டு உறுப்பினா் இக்பால் தலைமை வகித்தாா். இப்போராட்டத்தில், 10ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒருமுைான் குடிநீா் வழங்கப்படுவதாகவும், தெற்கு குண்டல் பகுதியில் அமைந்துள்ள மழைநீா் வடிகால் ஓடையை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் கோஷம் எழுப்பினா்.