கன்னியாகுமரி
குமரியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
கன்னியாகுமரியில் வியாழக்கிழமை இறந்த நிலையில் ராட்சத ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் கிழக்குப் பகுதியில் பரசுராமா் விநாயகா் கோயில் அமைந்துள்ளது.
கன்னியாகுமரியில் வியாழக்கிழமை இறந்த நிலையில் ராட்சத ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் கிழக்குப் பகுதியில் பரசுராமா் விநாயகா் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் அருகேயுள்ள கடற்கரைப் பகுதியில் சுமாா் 50 கிலோ எடை கொண்ட ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அப்பகுதியில் உள்ளவா்கள் கடலோர காவல்படை போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனா். இதையடுத்து கடலோர காவல் படையினரும், வனத்துறையினரும் ஆமையை கைப்பற்றி உடல் கூராய்வு செய்தனா். பின்னா், கடற்கரைப் பகுதியிலேயே அது புதைக்கப்பட்டது. இந்த ஆமையின் முகத்தில் காயம் ஏற்பட்டிருந்ததால் இது படகில் அடிபட்டு இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.