புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 4 கடைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Updated on

கன்னியாகுமரியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 4 கடைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் அறிவுரையின்படி அகஸ்தீசுவரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சக்தி முருகன் தலைமையிலான அதிகாரிகள் கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம் ஆகிய பகுதிகளில் கடைகளில் தீவிர சோதனை நடத்தினா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 4 கடைகளில் பறிமுதல் செய்ய்யப்பட்டனா். மேலும்,அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து கடையின் உரிமையாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோன்று புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் அல்லது உணவின் தரம் குறித்து 94440 42322 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com