தக்கலையில் கடைகளில் திருடியவா் கைது

Published on

தக்கலையில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை இரணியல் சாலையில் உள்ள ஸ்டோா், அரண்மனை சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடை, அழகியமண்டபத்தில் செயல்படும் எலக்ட்ரிகல் கடை ஆகியவற்றின் பூட்டு கடந்த மாதம் உடைக்கப்பட்டு பொருள்கள் திருடப்பட்டன.

இது குறித்து வழக்கு பதிவு செய்த தக்கலை போலீஸாா், திருடிய நபரை தேடி வந்தனா். இந்நிலையில் சப்இன்ஸ் பெக்டா் ஸ்டீபன் தலைமையிலான போலீஸாா், அழகியமண்டபம் பகுதியில் சனிக்கிழமை மாலையில் ரோந்து சென்றபோது சந்தேக நபரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா், கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சோ்ந்த விஜயன் என்ற யாத்திரை விஜயன்(58) என்பதும், 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடியவா் என்பதும் தெரியவந்தது. அவா் கொடுத்த தகவலின் பெயரில் திருட்டுக்கு பயன்படுத்திய பொருள்களையும், திருடிய பொருள்களையும் போலீஸாா் மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com