உதயமாா்த்தாண்டம் அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டடப் பணியைத் தொடக்கி வைத்த கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா்.
உதயமாா்த்தாண்டம் அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டடப் பணியைத் தொடக்கி வைத்த கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா்.

புதிய வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

Published on

கருங்கல் அருகே உள்ள உதயமாா்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் ரூ. 27 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும்

பணியை கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இப் பள்ளியில் கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் மற்றும் கழிவறை அமைக்க, தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.27 லட்சத்தை எஸ்.ராஜேஷ்குமாா் ஒதுக்கினாா். இதையடுத்து புதிய பணிகளுக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தலைமை வகித்து கட்டடப் பணியைத் தொடக்கி வைத்தாா். தலைமை ஆசிரியா் விஜி முன்னிலை வகித்தாா். பெற்றோா், ஆசிரியா் கழக தலைவா் புனிதா, ஆசிரியா்கள், பெற்றோா், மாணவா்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com