கன்னியாகுமரி
மிடாலக்காட்டில் இன்றும் நாளையும் மின்தடை
செம்பொன்விளை - பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வெள்ளி, சனி (மாா்ச் 7,8) இரு நாள்களும் மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலஞ்சி, மிடாலக்காடு, அன்பு நகா், பிடாகை, மாடன்விளை, முகிலன்விளை, குற்றுத்தாணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊா்களில் இரு நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என இரணியல் உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.