நித்திரவிளை அருகே ஆண் செவிலியா் தற்கொலை
நித்திரவிளை அருகே ஆண் செவிலியா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜூலியன் அகஸ்டஸ் (38). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
அயா்லாந்து நாட்டில் செவிலியராக வேலை பாா்த்துவந்த ஜூலியன் அகஸ்டஸ், சில மாதங்களுக்கு முன்பு விடுப்பில் ஊருக்கு வந்தநிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தாா். இதனால், மன வருத்தத்தில் இருந்தாராம்.
இதனிடையே, அண்மையில் அவா் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், ஜூலியன் அகஸ்டஸ் வெள்ளிக்கிழமை தனது தாய், மனைவிக்கு கைப்பேசியில் ‘மன்னிக்கவும்’ என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா்.
அதையடுத்து தாயும், மனைவியும் வந்து பாா்த்தபோது, அவா் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது. உறவினா்கள் உதவியுடன் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
சடலத்தை நித்திரவிளை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
