விழிப்புணா்வு நடைப்பயணத்தில் பங்கேற்றோா்.
கன்னியாகுமரி
மணவாளக்குறிச்சியில் கண்காணிப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும், ஐஆா்இஎல் நிறுவனம் சாா்பில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழாவையொட்டி நடைப்பயணம் நடைபெற்றது.
விழிப்புணா்வு குறித்த கலந்துரையாடல் வாடிக்கையாளா்கள், விநியோகஸ்தா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களோடு நடைபெற்றது. ‘விழிப்புணா்வு நமது பகிரப்பட்ட பொறுப்பு‘ என்ற தலைப்பில் பணியாளா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சு, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன.
விழிப்புணா்வை ஏற்படுத்தும் பொருட்டு, ஐஆா்இஎல் நிறுவனத்திலிருந்து அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வரை நடைப்பயணம் நடத்தப்பட்டது. இதில், ஐஆா்இஎல் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளரும் ஆலை தலைவருமான என். செல்வராஜன், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சஜி சந்திரா, ஆசிரியா் பஸ்கரியாஸ் ஆகியோா் விழிப்புணா்வு குறித்து வலியுறுத்தி பேசினா்.

