இரு வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி.
இரு வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி.

குளச்சலில் 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சலில் இரு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Published on

குளச்சலில் இரு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையிலான அதிகாரிகள் குளச்சல் அருகே ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, அது நிற்கவில்லை. அதை அதிகாரிகள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டராம். அதில், 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதேபோல, குளச்சல் வாட்டா் டேங்க அருகே மற்றொரு வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அரிசியை கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com