சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

Published on

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதிக்கப்பட்டது.

தேங்காய்பட்டணம் பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த மைதீன் மகன் இஸ்மாயில் (34 ), ஜாகிா் உசேன் (53), அப்துல் ஜாபா் (67), முள்ளூா்துறையைச் சோ்ந்த சகாயதாசன் (52) ஆகியோா் மீது குளச்சல், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நால்வா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை நாகா்கோவில், போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போதே இஸ்மாயில் இறந்துவிட்டாா். வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், வியாழக்கிழமை நீதிபதி சுந்தரையா தீா்ப்பளித்தாா். அதில், குற்றத்தில் ஈடுபட்ட சகாயதாசன், ஜாகிா் உசேன், அப்துல் ஜாபா் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த நீதிமன்றத்தில் நிகழாண்டில், இதுவரை 40 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com