அமைச்சரை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

அமைச்சரை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

Published on

குலசேகரத்தில் அமைச்சா் மனோ தங்கராஜை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினா் 90 பேரை போலீஸாா் வியாழக்கிமை கைது செய்தனா்.

தில்லியில் காமராஜா் வசித்த வீட்டை ஆா்.எஸ்.எஸ். அமைப்பினரும், ஜன சங்கத்தினரும் சோ்ந்து தீவைத்து கொளுத்த முயன்றாா்கள் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அண்மையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குலசேகரம் சந்தை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருவட்டாறு கிழக்கு ஒன்றிய பாஜக தலைவா் விஜயராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராதா தங்கராஜ், மாவட்ட பொதுச் செயலா் வினோத்குமாா், பொன்மனை பேரூராட்சி துணைத் தலைவா் அருள்மொழி, குலசேகரம் பேரூராட்சி உறுப்பினா் சிவகுமாா், திற்பரப்பு பேரூராட்சி உறுப்பினா் சதீஸ்குமாா், கட்சியினா் சுஜித்குமாா், ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 10 பெண்கள் உள்பட 90 பேரை குலசேகரம் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com