‘கிள்ளியூா் வட்டாரத்தில் வாழை, மரவள்ளிக் கிழங்கு பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்’
கிள்ளியூா் வட்டாரத்தில் வாழை, மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் பிப்.28-க்குள் பயிா்க் காப்பீடு செய்யலாம் என கிள்ளியூ வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் சாஜிதா பா்வின்(பொறுப்பு) தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிள்ளியூா் வட்டாரத்தில் விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிா்களை பெருமளவில் சாகுபடி செய்து வருகின்றனா். இந்த விவசாயிகளுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் மூலம் வாழைக்கு ஏக்கருக்கு ரூ.4, 426 பிரிமீயம் செலுத்தி ரூ.88,525 இழப்பீடாகவும், மரவள்ளிக்கிழங்கு பயிா் ஏக்கருக்கு ரூ.1,470 பிரிமியம் செலுத்தி ரூ. 29,393 வரை இழப்பீடு பெறலாம். பிப்.28 ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் தகவல்களுக்கு கிள்ளியூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
