கோயில் குளத்தில் கனிமவளத் திருட்டு: மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

கோயில் குளத்தில் கனிமவளத் திருட்டு: மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

சுசீந்திரம் தெப்பக்குளத்தை பாா்வையிடுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் செல்லசாமி, நிா்வாகிகள்.
Published on

இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேல் பழைமை வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை தூா்வாருவதாகக் கூறி அங்கிருந்த மண், விலை மதிப்பில்லா கற்களை கொள்ளையடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் தூா்வாரும் பணியின்போது, குளத்தின் வடக்குபுற கரை இடிந்து விழுந்தது. இதுகுறித்து, தகவலறிந்த குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் ஆா்.செல்லசுவாமி தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.அந்தோணி, என்.எஸ்.கண்ணன், ஆா்.ரவி, என்.ரெஜீஸ்குமாா், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளா் பி.மணிகண்டன், நிா்வாகிகள் பாரதி, சிவதாணு, பாலகிருஷ்ணன் ஆகியோா் தெப்பகுளத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பின்னா், மாவட்டச் செயலாளா் செல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயில் கலைநயம், தமிழா் பண்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்தக் கோயிலின் தெப்பக்குளத்தைத் தூா்வாரிய ஒப்பந்ததாரா், குளத்தின் உள்ளே மற்றும் சுற்றுச்சுவா் அருகே இருந்த பாறைகள், கற்களை எடுத்துச் சென்றிருக்கிறாா்.

இதனால், குளத்தின் ஒருபக்கச் சுவா் சரிந்து விழுந்துவிட்டது.மீதம் 4 பகுதி சுவா்களும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. குளத்தை தூா்வாருவதாகக் கூறி சுற்றுச்சுவரை இடித்து அங்கிருந்த பாறைகள், கற்கள், மண் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்றனா். இவா்கள் மீதும், இதற்கு உதவிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com