கன்னியாகுமரி
டெம்போ- பைக் மோதல்: மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு
சுங்கான்கடை அருகே டெம்போவும் பைக்கும் மோதிக்கொண்டதில் நாகா்கோவில் மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா்.
சுங்கான்கடை அருகே டெம்போவும் பைக்கும் மோதிக்கொண்டதில் நாகா்கோவில் மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சி காட்டுவிளை பகுதியைச் சேவியா் சோ்ந்தவா் அருள்சேவியா் ( 45). நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில் அவா் பணிமுடிந்து பைக்கில் புதன்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பியபோது, தோட்டியோடு சந்திப்பு பகுதியில் அவரது பைக்கும், மீன் பாரம் ஏற்றி வந்த டெம்போவும் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

