புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

Published on

நித்திரவிளை அருகே சட்ட விரோதமாக புகையிலை பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகே தூத்தூா் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜா ராபா்ட் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், யூஜின் என்பவரின் பெட்டிக்கடையை சோதனை செய்தபோது, பதுக்கி வைத்திருந்த 37 பொட்டலம் புகையிலை பொருள்கள் கண்டறியப்பட்டதாம். இதையடுத்து போலீஸாா், புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளா் யூஜினை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com