கன்னியாகுமரி
புதுக்கடை அருகே வியாபாரி மீது தாக்குதல்
புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பைங்குளம் பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் ரவீந்திரன்(60). அப்பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் அஜின்(30) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியில் நின்றிருந்த ரவீந்திரனை அஜின் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
