மாா்த்தாண்டம் அருகே 2 நாள்கள் மின்நிறுத்தம்

உயரழுத்த மின் கம்பிகளை மாற்றியமைக்கும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், மாா்த்தாண்டம் அருகே வியாழன், வெள்ளி (அக். 9, 10) ஆகிய 2 நாள்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

அதன்படி, குழித்துறை மின்கோட்டம் பள்ளியாடி பிரிவுக்குள்பட்ட சேறோட்டுகோணம், இடவிளாகம், விமலபுரம், காட்டவிளை, சாமிவிளை, கீழ்விளை பகுதிகளில் இரு நாள்களும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com