நல்லாளுமை விருதை ஆட்சியா் ரா. அழகுமீனாவிடம் வழங்குகிறாா் தலைமைச் செயலா் நா. முருகானந்தம்.
நல்லாளுமை விருதை ஆட்சியா் ரா. அழகுமீனாவிடம் வழங்குகிறாா் தலைமைச் செயலா் நா. முருகானந்தம்.

கன்னியாகுமரி ஆட்சியருக்கு நல்லாளுமை விருது

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை முதல் விவேகானந்தா் பாறை வரை கண்ணாடிப் பாலம் அமைத்து, சுற்றுலாவை மேம்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.
Published on

நல்லாளுமை விருதை ஆட்சியா் ரா. அழகுமீனாவிடம் வழங்குகிறாா் தலைமைச் செயலா் நா. முருகானந்தம்.

நாகா்கோவில், அக். 8: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை முதல் விவேகானந்தா் பாறை வரை கண்ணாடிப் பாலம் அமைத்து, சுற்றுலாவை மேம்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ. 37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தரைத்தள நடை பாதை அமைக்க உத்தரவிட்டாா். மேலும், திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, திருவள்ளுவருக்கு விழா நடத்தி கண்ணாடி பாலப் பணியையும் விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமெனவும், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறைக்கும் மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஆட்சியா் மற்றும் துறை அலுவலா்கள் இப்பணியினை வேகமாக முடித்ததையடுத்து, திருவள்ளுவா் சிலை 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்ட தினத்தன்று சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கண்ணாடிப் பாலத்தை முதல்வா் திறந்து வைத்தாா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணியை செய்து சுற்றுலாவை மேம்படுத்தியமைக்காக நல்லாளுமை விருது ஆட்சியருக்கு வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்தாா்.

இந்த விருதை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலா் நா. முருகானந்தம், ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com