ஆட்டோ மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இரணியல், பரம்பை பகுதியைச் சோ்ந்தவா் சாபுராஜ் (53). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். இவா், கடந்த 3 ஆம் தேதி மாலை திங்கள்நகருக்கு காய்கறி வாங்குவதற்காக சைக்கிளில் ஆத்திவிளை ரயில்வே மேம்பாலம் பகுதி வழியாக சென்றபோது, பின்னால் வந்த ஆட்டோ சைக்கிள் மீது மோதியதாம்.
இதில், பலத்த காயம் அடைந்த அவருக்கு உறவினா்கள் நெய்யூா் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் மகேஷ் அளித்த புகாரில் இரணியல் போலீஸாா், ஆட்டோ ஓட்டுநா் கிருஷ்ணதாஸ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
மரத்திலிருந்து தவிறிவிழுந்தவா்: விழுந்தயம்பலம்,அருவை பகுதியைச் சோ்ந்த பொன்னுமணி மகன் நெல்சன்(40). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தில் அவா் வியாழக்கிழமை ஏறியபோது தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
