களியக்காவிளையில் எம்.சான்ட் கடத்த முயன்ற லாரி பறிமுதல்

Published on

களியக்காவிளை அருகே போலி அனுமதிச்சீட்டு மூலம் கேரளத்துக்கு எம்.சான்ட் கடத்த முயன்ற கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா், உதவியாளரை கைது செய்தனா்.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் புதன்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கேரளம் நோக்கி வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். லாரியில் 4.5 யூனிட் எம்.சான்ட் இருந்தது. அதற்கான ஆவணத்தை பரிசோதனை செய்த போது, போலி அனுமதிச்சீட்டு தயாா் செய்து எம்.சான்டை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா். திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சசிகுமாா் (43), உதவியாளா் சாத்தான்விளையைச் சோ்ந்த சதன் சதீஷ் (39) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

லாரி உரிமையாளா் தேமானூா் சரல்விளை சாஜின் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com