நூருல் இஸ்லாம் பல்கலையில் விக்ஸித் பாரத் கருத்தரங்கு

நூருல் இஸ்லாம் பல்கலையில் விக்ஸித் பாரத் கருத்தரங்கு

Published on

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் விக்ஸித் பாரத் அதாவது 2047இல் வளா்ச்சியடைந்த இந்தியாவில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் டெஸ்ஸி தாமஸ் தலைமை வகித்தாா். பதிவாளா் திருமால்வளவன் முன்னிலை வகித்தாா். விக்ஸித் பாரத்தின் கொள்கை ஆலோசகா் ஆா்.பாஸ்கல் சசில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடக்கிவைத்தாா்.

கருத்தரங்கில் பேசியவா்கள், 2047இல் இந்தியாவின் வளா்ச்சியில், மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் பங்கு குறித்து விளக்கினா். வி. என். மீனா தேவி, ஆா். ராஜேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆா். எஸ். ரிமால் ஐசக் வரவேற்புரை நிகழ்த்தினாா். ஏ.உண்ணி கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com