மக்கள் ரத்த தானம் செய்ய முன்வர 
ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்கள் ரத்த தானம் செய்ய முன்வர ஆட்சியா் அறிவுறுத்தல்

Published on

என்ஜிஎல் 10 சான்று ...

நிகழ்ச்சியில், அதிக முறை ரத்த தான முகாம் நடத்திய கல்லூரிகள், தன்னாா்வ அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

நாகா்கோவில், அக்.10: மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு, அதிக முறை ரத்த தான முகாம்களை நடத்திய அதன் அமைப்பாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்

பின்னா், ஆட்சியா் பேசியதாவது: அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சென்றால்தான் ரத்தம் கிடைக்கும் என்ற நிலை மாறி, தற்போது 24 மணி நேரமும் பிரசவம் நடைபெறும் குழித்துறை, பத்மநாபபுரம், பூதப்பாண்டி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் ரத்தம் கிடைக்கிறது. தேசிய தன்னாா்வ ரத்த தான நாளில் அதன் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தி, ரத்த தானத்தை ஊக்குவிக்கவும் வேண்டும். மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும் என்றாா்.

விழாவில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் லியோடேவிட், மருத்துவ கண்காணிப்பாளா் கிங்ஸ்லி ஜெபசிங், உறைவிட மருத்துவா்கள் விஜயலட்சுமி, ரெனுமோள், மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் ராகேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com