களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

Published on

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா் கோழிவிளை பகுதியில் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவரிடமிருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 100 கிராம் கஞ்சா இருப்பதும், அவற்றை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும், அவா், கோழிவிளை இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமைச் சோ்ந்த சிதம்பரம் மகன் லோக ரூபன் (28) என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, லோகரூபனை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com