கன்னியாகுமரி
தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
காப்புக்காடு, பெரியவிளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் அனிஷ் (31). தொழிலாளியான இவா், மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தாராம்.
இம்மாதத் தவணையை முறையாக கட்டவில்லை எனக் கூறி, அவரை இருவா் ஞாயிற்றுக்கிழமை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.