மரியா ஹோமியோபதி கல்லூரி மாணவருக்கு விருது

Published on

திருவட்டாறு மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவருக்கு இளம் ஆராய்ச்சி மாணவா் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில், ‘பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் அறிவேள்வி -2025’ என்ற நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவா் எட்வா்ட் ரோசன் பால் பங்கேற்று இளம் ஆராய்ச்சி மாணவா் விருதை வென்றாா்.

அவருக்கு, மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே. நாராயணசாமி ஆகியோா் விருதுச் சான்றிதழ் வழங்கினா்.

மாணவரை மரியா கல்விக் குழுமத் தலைவா் டாக்டா் ஜி. ரசல்ராஜ், துணைத் தலைவா் டாக்டா் பி. ஷைனி தெரசா, கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com