கேரளத்துக்கு கடத்த முயன்ற  1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தக்கலை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசியை பறக்குபடையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

தக்கலை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசியை பறக்குபடையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பறக்கும் படை தனி வட்டாட்சியா் பாரதி தலைமையிலான பறக்கும் படையினா், தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனா். காா் நிற்காமல் சென்றதையடுத்து விரட்டி பிடிக்க முயன்ற போது, காரை நிறுத்தி விட்டு 3 போ் தப்பி ஓடினா்.

பறக்கும் படையினா் சோதனையிட்ட போது, காரில் 1700 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா். தப்பிச் சென்றவா்களை தேடி வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com