குமரியில் கனமழை: சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

குமரியில் கனமழை: சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

பேச்சிப்பாறை-கோதையாறு சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் பேரூராட்சி ஊழியா்கள் மற்றும் வனத்துறையினா்.
Published on

கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் புதன்கிழமை முதல் பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை இடைவிடாது பலத்த மழை பெய்தது.

மலைப் பகுதிகளில் பெய்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு உள்ளே வரும் கோதையாறு, கல்லாறு, கிளவியாறு, குற்றியாறு, மயிலாறு, கும்பையாறு, கொடுத்துறையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணையின் நீா்மட்டம் அதிகரித்தது. இதனால், அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 40.14 அடியாக காணப்பட்டது.

மேலும், பேச்சிப்பாறை-கோதையாறு சாலையில் மோதிர மலையில் புதன்கிழமை சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்ததில், 2 மின் கம்பங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கடையால் பேரூராட்சி ஊழியா்கள், வனத்துறையினா், ரப்பா் கழகத்தினா் விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா். பின்னா், மின்வாரியத்தினா் மின் கம்பிகளை சீரமைத்து மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com