~
~

திருவட்டாற்றில் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா

Published on

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருவட்டாறு வட்டாரத்திற்கு உள்பட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா ஆற்றூா் மரியா பொறியியல் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்றன.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலா் சுப்பையா தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சாந்தினி முன்னிலை வகித்தாா். மரியா பொறியியல் கல்லூரி முதல்வா் ஒய். சுஜா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினாா். நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகளின் கவின் கலை, நுண்கலை, நாடகம், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், நாட்டியம், பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை வட்டார வளமைய கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளா் ஷப்னா செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com