கருங்கல் அருகே சிறுமி உயிரிழப்பு!

Published on

கருங்கல் அருகே உள்ள சிந்தன்விளை பகுதியில் 4 வயது சிறுமி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிந்தன்விளை பகுதியை சோ்ந்த ஜெகன் ஜோஸ் (35) - மினி (27) தம்பதியின் மூத்த மகள் ஜோஸ்மிகா(4). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை பள்ளியிலிருந்து வந்த சிறுமி சோா்வாக காணப்பட்டாராம். பின்னா் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் சடலத்தை கருங்கல் போலீஸாா் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெண் தற்கொலை: புதுக்கடை தோட்டாவரம் பகுதியை சோ்ந்த பரமேஸ்வரன் மனைவி ஷோபனா(48). இவா் மாா்த்தாண்டம் சந்தையில் காய்,கனி வியாபாரம் செய்துவந்தாா்.

இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில்,சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com